search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோர்ட் அனுமதி"

    சபரிமலை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரெஹனாவிடம் ஜெயிலில் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #Sabarimala #RehanaFathima
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாடல் அழகியும், பி.எஸ்.என்.எல். ஊழியருமான ரெஹனா பாத்திமா போலீஸ் பாதுகாப்புடன் செல்ல முயன்றார்.

    பக்தர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து அவர், ஐயப்பனை தரிசிக்காமல் திரும்பினார். அதன் பிறகு சபரிமலை குறித்து பல்வேறு கருத்துக்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டார்.

    மேலும் ரெஹனா பாத்திமா ஆபாச உடையுடன் இருக்கும் படங்களும் வெளியாகின. இது குறித்து ராதாகிருஷ்ணன் மேனன் என்பவர் பத்தினம் திட்டா போலீசில் புகார் செய்தார்.

    புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 27-ந்தேதி ரெஹனா பாத்திமாவை கைது செய்தனர். பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    ரெஹனா பாத்திமா கைதானதும் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அவரை பணியில் இருந்து சஸ்பெண்டு செய்தது.

    இதற்கிடையே ஜெயிலில் இருந்த ரெஹனா பாத்திமாவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை நீதிபதி ஏற்க மறுத்தார். அதே நேரம் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ஜெயிலுக்கு சென்று ரெஹனா பாத்திமாவிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தலாம் என்று அனுமதி வழங்கினார்.  #Sabarimala #RehanaFathima


    ×